Wednesday, September 23, 2015

மண்ணற்றவனின் மண்வாசம்


அடுக்ககத்தின்
ஐந்தாம் தளத்தில் குடியிருப்பவனின்
சன்னலோரம் அசையும்
தொட்டிச்செடியை ரசிக்கும் விழிகளுக்கும்;

வேப்பிலைகள் நிறையும்
அறையெண் குறிப்பிடப்பட்ட
அஞ்சல் பெட்டியைக் கடந்து
மின்னஞ்சல்களைத் துலாவிப் பழகிய
விரலேறிய மூளைக்கும்;

விபத்துப் பரப்பொன்றில்
மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையே
துடித்துக் கொண்டிருப்பவனை
அத்தனை லாவகமாய்க் கடந்து
அலுவலகம் ஏகும் இதயங்களுக்கும்;

யாராவது அனுப்பி வைப்போம்
பார்சலில் கொஞ்சம்
கிராமத்து மண்ணை.

அதைப் பிரிக்கும் போதாவது
மண் சொந்தமற்ற
அடுக்ககத்தில் வாழ்பவனுக்குள்
நிறையட்டும்
பண்பாட்டை உலகிற்கேத் தந்த
தன் கிராமத்து மண்வாசம்!
-வைகறை,
புதுக்கோட்டை.

ஒப்புதல்:-

@ "மண்ணற்றவனின் மண்வாசம்" எனும் இக்கவிதை "வலைப்பதிவர் சந்திப்பு 2015" நடத்தும் மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது.
@ பிரிவு: 4.புதுக்கவிதை (முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்து)
@ இக்கவிதை எனது சொந்த கற்பனையே!
@ இக்கவிதையை வேறு எந்த இதழிலோ, மின்னிதழ்களிலோ, பிற ஊடகங்களிலோ வெளியிடவில்லை என உறுதியளிக்கிறேன்.

5 comments:

  1. இது கவிதை!!!!!

    இது தான் இந்த தலைப்புக்கு நான் உணர்ந்த கவிதை!!

    வாழ்த்துகள் அண்ணா!

    ReplyDelete
  2. புதுக்கவிதையும் போட்டிக்குவந்தாச்சு..........அப்பநாந்தான்ஒன்னுமெழுதலையா....................?

    ReplyDelete
  3. மண்மணம் ஊட்ட முயலும் கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அழகான அருமையான சிந்திக்க வைக்கும் வரிகள்வரிகள் வாழ்த்துக்கள்! நன்றி நண்பரே

    ReplyDelete
  5. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...